கொரோனா பயம் :தமிழகத்தில் வீதியில் வைத்தியர் சடலம்!
உயிரிழந்த மருத்துவரது உடலத்துடன் அலைந்து திரியும் பரிதாபத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சென்றுள்ளது.
நேற்று திங்கள் மாலை (13) சென்னை அம்பத்தூர் மயானத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றில் மருத்துவ கவச உடைகளுடன் வந்திறங்கிய அப்பல்லோ மருத்துவமனையின் ஊழியர்கள் 4 பேர் (ஆந்திராவைச்சேர்ந்த) உயிரிழந்த மருத்துவரின் உடலை மயானத்தின் முன் வீசிவிட்டு, அங்கிருந்து உடனடியாக சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தக் காட்சியைப் பார்த்த மயான ஊழியர்கள், பயத்தில் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தாரா, சாதாரண காய்ச்சலால் உயிரிழந்தாரா, ஏன் அவரது உடல் அங்கு கொண்டுவரப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், உடல் மீண்டும் வானகரம் அப்பல்லோ மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த ஒரு மருத்துவரது மரணம் கொரோனாவினால் ஏற்பட்ட மரணமாகவே இருந்தாலும் உடலத்தை உரியவாறு நல்லடக்கம் செய்யாத மருத்துவமனை பற்றி சர்ச்கை மூண்டுள்ளது.
இதனிடையே உடலை அந்த மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர் மக்கள என எத்தனை காந்திகள் பிறந்தாலும், எத்தனை காமராஜர்கள் வந்தாலும், எத்தனை அப்துல் கலாம்கள் அறிவுரை சொன்னாலும் எல்லாமே இந்தியாவிற்கு விழலுக்கு இறைத்த நீரே சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Post a Comment