பார்த்துக்கொண்டிருக்க முடியாது:சீ.வீ.கே எச்சரிக்கை!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் மூவருக்கு இருப்பது இன்று (08) உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே அரச அலுவலர்கள் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை ஊடாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மட்டும் அமுல்செய்வதை உறுதிப்படுத்த வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார்.

இதனை தாண்டி பாதிப்புக்குள்ளானோருக்கு உதவ விரும்புபவர்கள் தங்களிடம் வழங்கும் பொருட்கள் அல்லது நிதி தங்களுடைய பணிப்பிற்கமைய நிறைவேற்றப்படுவதையும் வேறெந்த அரசியல்வாதியும் அவற்றில் தலையீடு செய்யாதிருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் கோரியுள்ளார்.அவ்வாறான நெருக்குதல் அலுவலர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தங்களுடையது என்பதை ஒரு முன்னாள் அரச அதிகாரி என்ற வகையில் வலியுறுத்த விரும்புகின்றேன் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினுடைய பணிப்பின் பேரில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் இன்னும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. அவ்வாறான நிலையை சீர்செய்து சகல நிவாரண உதவிகளும் எல்லோரையும் சென்றடைவதை மீளாய்வு முறையில் உறுதி செய்யுமாறு கோரியுள்ள சீ.வீ.கே.சிவஞானம் தடங்கலின்றி மக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை கிடைப்பதை உறுதிப்படுத்த கோரியுள்ளார்.

No comments