கொரோணா தொற்று சந்தேகம்?யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் ஒருவருக்கு கொரோணா ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் ஒருவர் யாழ்ப்பாணம்   வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் தனது மகனிடம் அவுஸ்திரேலியாவிற்க்கு சென்று வந்த நிலையில் குறித்த பெண்மணி தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட் நிலையில் அவரிற்க்கு திடீரென ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக மருதங்கேணி பிரதேச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து யாழ் போதனா மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் பொலிஸ் மற்றும் இராணுவக் கண்காணிப்பில் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments