கொரோனா சிகிச்சை விடுதி காலியானது!யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதி இன்று காலை எந்த நோயாளிகளும் இல்லாமல் வெறுமையாக உள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள சிறப்பு சிகிச்சை விடுதியில் 69 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஏனைய 68 பேரும் பரிசோதணைகளின் பின் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த சிகிச்சை விடுதியில் தற்போது எவரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்று பணிப்பாளர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். 

No comments