நீடிப்பதா?இல்லையா? கோத்தா தலைமையில் கூட்டம்!


ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையே முக்கிய கலந்துரையாடலொன்று இன்று அல்லது நாளை இடம்பெவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தினை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் கட்டுப்பாடற்ற வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படலாமென ஊகங்கள் வெளியிடப்பட்டுவருகின்றது.

நேற்று வெள்ளி இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எதிர்வரும் திங்கள் காலை வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments