ஊரடங்கு நீடிக்கலாம்:நிலமை மோசமடைகின்றது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 414 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது.

இவர்களில் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை வீரர்கள் 30 பேர் உள்ளடங்குகின்றனர் என, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

முன்னதாக குறித்த முகாமை சேர்ந்த 30 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடற்படையினருடன் தொடர்புடைய அவர்களது 4000 குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வெள்ளி  (24) இரவு மீளவும் அமுலாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் வெள்ளி (24) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மீளவும் இரவு 8 மணிக்கு அமுலாகியது.

இந்த ஊரடங்கு மீளவும் எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். நாளை (25), நாளை மறுநாள் (26) இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

No comments