யாழில் ஆலோசனையினை புறந்தள்ளி ஊரடங்கு விலக்கம்?


வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்க பணிப்பாளர மற்றும் பாதுகப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரது ஆட்சேபனையினை தாண்டியே யாழிலும் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 6 பிரதேச செயலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் மே 5ஆம் திகதி வரையில் ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என்று வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பரிந்துரைத்திருந்தது.

இதன் பிரகாரம் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு, மருதங்கேணி, மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை விலக்கிக்கொள்ள பரிந்துரையினை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் அழுத்தங்களையடுத்து அவரது வாய் மூடப்பட்டுவிட்டது.

No comments