வைத்திய சங்கம்:பூனைக்கும் காவல்-பாலுக்கும் தோழன்!


இலங்கை அரசின் முகவரமைப்பான அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பின்னணியில் யாழிலும் தேர்தலிற்காக ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமக்கும் அதற்கும் தொடர்பில்லையென நிறுவ முற்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி.த.காண்டீபன் இன்று விடுத்துள்ள குறிப்பில் இன்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திட்டமிடல் வைத்திய அதிகாரி வட மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனை ஆகியோருடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் கிளை,தெல்லிப்பளை வைத்தியசாலை கிளை,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கிளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளை ஊரடங்கு நீக்கத்தால் ஏற்படும் அபாய நிலையினனயும் அதன் போது நாம் விரைவான தயார்படுத்துவது செய்ய வேண்டிய வழிமுறைகள், மக்களுக்கு வழங்க வேண்டிய அறிவுறுத்தல்கள் பற்றி கலந்துரையாடினோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர் முரளி வல்லிபுரநாதனை யாழிலிருந்து விலக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் செயற்பட்ட விதம் பற்றி கடும் விவாதங்கள் நிலவும் நிலையில் மௌனம் காத்து வந்திருந்த குறித்த சங்கம் தற்போது தமக்கு இதனுடன் தொடர்பில்லையென்பதை காண்பிக்க முற்பட்டுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.


No comments