கொரோன;இந்தியாவில் மாநிலவாரியான இறப்பு மற்றும் தொற்றுக்கள்!

கடந்த உத்தியோகபூர்வ எண்ணிக்கையிலிருந்து 80 புதிய வழக்குகள் உள்ள நிலையில், இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் (Coronavirus) வழக்குகள் இன்று 149 இறப்புகளுடன் 5,274 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மொத்த கோவிட் -19 வழக்குகள் 853 நேர்மறை வழக்குகளாக அதிகரித்துள்ளன. அவற்றில் 4,714 செயலில் உள்ள வழக்குகள் ஆகும்.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கோவிட் -19 வழக்குகளில், 71 வெளிநாட்டினர், 410 பேர் தொற்று நோயால் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது 1,018 பேருக்கு கொரோனா என்ற நிலையில் மகாராஷ்டிரா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் மாநிலமாக 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 64 இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் தமிழ்நாடு (690), டெல்லி (576) என பதிவாகியுள்ளது.
அதேபோல இறப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவைத் தவிர, டெல்லி (9) குஜராத் (13), தெலுங்கானா (7), மத்தியப் பிரதேசம் (13), பஞ்சாப் (7), கர்நாடகா (4), மேற்கு வங்கம் (5) ), ஜம்மு-காஷ்மீர் (2), உத்தரபிரதேசம் (3) கேரளா (2), ஆந்திரா (4) ராஜஸ்தான் (3) ஹரியானா (3), தமிழ்நாடு (8). பீகார், ஒடிசா மற்றும் மிசோரம் தலா ஒரு இறப்பைப் பதிவு செய்துள்ளன.
"இன்றுவரை நாங்கள் 1,21,271 பேருக்கு சோதனை செய்துள்ளோம்" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் - ICMR) ஆர் கங்ககேத்கர் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, உத்தரப்பிரதேச அரசு, டெல்லியின் எல்லையான நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட மாநிலத்தின் 15 மாவட்டங்களில் உள்ள ஹாட்ஸ்பாட்களை (Hotspots) சீல் வைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின் 15வது நாளான இன்று, தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-ஆக அதிகரித்துள்ளது. அதில் முதலிடத்தில் 156 என சென்னை உள்ளது. அதேநேரத்தில் தேனி மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 12 பேர் பெண்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களின் உறவினர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள்.
உத்தரபிரதேசத்தில் தற்போது 343 வழக்குகள் உள்ளன. இவற்றில், ஆக்ரா, லக்னோ, காஜியாபாத், கவுதம் புத் நகர், கான்பூர் நகர், வாரணாசி, ஷாம்லி, மீரட், பரேலி, புலந்த்ஷாஹர், பஸ்தி, சஹாரன்பூர், மகாராஜ்கஞ்ச் மற்றும் சீதாபூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட ஹாட்ஸ்பாட்களை சீல் வைக்க அரசாங்கம் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது என்று மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.

No comments