தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்!

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகி உள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியாளர் இன்னும் முடிவாகவில்லை.

அக்கட்சியின் மூத்த தலைவரும் வெர்மவுண்ட் மாகாண செனட்டருமான பெர்னி சாண்டர்ஸ் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு போட்டியாளரான ஜோ பிடன் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெர்னி விலகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

No comments