கொரோனா தடுப்பூசிகளை மனிதர்களுக்கு சோதனை நடத்த சீனா ஒப்புதல்!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நாடு சீனாவாகும். தனது நாட்டு மக்களை கொரோனா நோயிலிருந்து
காப்பாற்றவும், கொரோனா நோயின் இரண்டாம் தாக்கத்திலிருந்து விடுபடவும் சீனா தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை மனிதர்களுக்கு ஏற்றி சோதனை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பாக இரண்டு தடுப்பூசிகளை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்யவுள்ளனர்.

இந்தப் பரிசோதனைத் தடுப்பூசிகளை பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்ட சினோவாக் பயோடெக் மற்றும் அரசுக்குச் சொந்தமான சீனா தேசிய மருந்துக் குழுவின் இணை நிறுவனமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிகல் ப்ராடக்ட்ஸ் உருவாக்கி வருவதாக சீன அரசின் செய்தி நிறுவனமான சின்ஹுவா அறிவித்துள்ளது.

No comments