ஊரடங்கை விலக்க தயாரில்லை:பொது போக்குவரத்து ஆரம்பம்!


இலங்கையின் ஆறு மாவட்டங்களில் ஊரடங்கை விலக்கிக்கொள்ள அரசு மறுத்துவருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் போக்குவரத்து செயற்பாடுகளை, இம் மாதம் 20 திகதி முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில்,  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த செயற்பாடுகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுமென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 5,000 பஸ்களையும் 400 ரயில்களையும், பொதுப் போக்குவரத்துக்காக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments