அம்பாறை மாவட்டத்தில் வழமைக்குத் திரும்பியது தபால் சேவை

இலங்கையில் கொரோனா தொற்று நோய் பரவுவதை அடுத்து ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி
தொடக்கம்  தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் முடக்க நிலைக்குச் சென்றன. தற்போது அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத்திற்கு பின்னர் வழமைக்குத் திரும்பியுள்ளது தபால் சேவை.

அம்பாறை கல்முனையில் தபாலகத்தின் உள்ளமைப்பு சமூக இடைவெளியை கருத்திற்கொண்டு அமைக்கட்டுள்ளது என்றும் ஊழியர்கள் அனைவரும் சுவாசக் கவசங்கள் அணிந்து தங்களது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை தொடருந்து தபால் சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் தபால் சேவைகள் மாவட்ட ரீதியில் சீராக அமையவில்லை. சிறப்பு நடவடிக்கையாக வாகனங்களில் தாபல்கள் மற்றும் பொதிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றை வைத்து தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

No comments