இன்றும் யாழிலிருந்து விடுதலை!


கொரோனா தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்பட்டவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கிலுள்ள கண்காணிப்பு  நிலையங்களிலிருந்து தென்னிலங்கை மக்கள் விடுவிக்கப்பட்டுவருகின்றனர்.

நேற்று இரணைமடு முகாமிலிருந்து விடுவிப்பு நடைபெற்றிருந்த நிலையில் இன்று கொடிகாமம், விடத்தற்பளையில் உள்ள 522 வது படைத்தள முகாமிலிருந்தவர்கள் 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

கொடிகாமம் விடத்தல்பளை 522 பிரிகேட் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 233 பேரே வீடு செல்ல அனுமதிக்கப்படடிருந்தனர்.இந்தியாவின் புத்தகாயாவுக்கான யாத்திரையை மேற்கொண்ட நிலையில் நாடு திரும்பியவர்கள் 233 பேர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.இவர்களில் 157 பெண்கள் மற்றும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய கலந்துகொண்டிருந்து கொண்டு பயணமனுப்பி வைத்திருந்தார்.

No comments