தாவடியில் கொரோனா: முரண்பாடுகள் உச்சம்?


கொரோனா விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை வெளியிட பொது
மையமொன்று யாழில் உருவாக்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழில் 7 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரிகளில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை.தாவடி, பகுதியில்நேற்று முன்தினம் 18 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று வரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களென இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் சில ஊடகங்கள் பொய்யான செய்தி பரப்புவதற்கும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எனினும் அதே தகவல் வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் அடிப்படையில் வெளியானதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தற்போது அத்தகவலை மறுதலித்துள்ளார்.

No comments