3053பேர் தனிமைப்படுத்தல்:523பேர் கொரோனாவில்!


இலங்கையில் 33 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று (26) 63 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்; எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா  தொற்றிலிருந்து 120 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை,  396 பேர் தொடர்ந்தும் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
கொரோனா தொற்றினால் இலங்கையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதுபாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்தபோவதாக பரவிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, அவர் தெரிவித்துள்ளார். 
அத்துடன், விடுமுறையில் சென்றுள்ள படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, சிறிய முகாம்களை அண்மித்துள்ள பாடசாலைகள் சிலவற்றை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். 
இதற்கு அனுமதி கிடைத்துள்ளபோதிலும், அவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தபோவதில்லை என, இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments