சமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை!


கொரோனா குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்Nநோக்கில் 10 ஆயிரதம் துண்டுப்பிரசுரங்களை சிவன் அறக்கட்டளை அமைப்பு நேற்று புதன்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கே.குமாரவேலிடம் கையளித்துள்ளது.

இந்நிலையில் வைத்திய சாலை ஊழியர்களுக்கு தேவையான கண்ணாடியிலான முகக் கவசத்தை கையளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்படி விடயம் தொர்டபில் அந்த அமைப்பின் ஸ்தாபகர் கனேஸ்வேலாயுதம் இன்று வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

எமது அமைப்பு மக்கள் நலன் சார்ந்து செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மக்கள் நலன் பணிகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது கொரோனாவின் தாக்கம் நாட்டில் அதிகரித்து செல்கின்றது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவையான ஒன்றாகும். இதன் பிரகாரம் சமூக இடைவெளி குறித்த மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் 10 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் கே.குமாரவேலிடம் நேற்று புதன்கிழமை கையளித்தோம்.

இந்த துண்டுப்பிரசுரத்தில் எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சமூக இடைவெளி முக்கியமானது என்பதை படம்பிடித்து காட்டியுள்ளோம். அத்துடன் எப்போதும் ஒவ்வொருவருக்கும் இடையில் 3 அடி இடைவெளியை பேண வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த துண்டுப்பிரசுரங்களை கையளித்த போது வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களை மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டுவதற்கு மேலும் 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்கள் தருமாறு எம்மிடம் சுகாதார துறையினரால் கோரிக்கை விடுகப்பட்டது.

இதனை நாம் தருவதாக யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் தெரிவித்தோம். இதற்கமைய மேலும் 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு விரைவில் வழங்க உள்ளோம்.

இவ்வாறான நிலமையில் வைத்திய சாலை ஊழியர்களின் நலனை பேணும் வகையில் அவர்களுக்கு தேவையான கண்ணாடியில் அமைந்த முகமூடி கவசங்களை பெற்றுத்தர தயாராக உள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளோம்.

முதல் முதலில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது மக்கள் சமூக இடைவெளியை பேனாதிருந்தை இட்டு நாம் கவலை அடைந்தோம். இதன் பிரகாரமே மேற்படி துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வழங்க முன்வந்தோம்.
மேலும் எம்மால் நெல்லியடி சந்தைப் பகுதியில் மக்கள் கைகளை கழுவி சுகாதாரத்தை பேணும் வகையில் கால் அழுத்தத்தினால் செயற்படுத்தப்படும் குழாய் நீர் செயற்றிட்டத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்தோம்.

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியமானது. சமூக இடைவெளியை பேனுவது மாத்திரமல்லாது முக கவசங்களை அணிவது, உள்ளிட்ட சுகாதாரத்தை பேணும் செயற்பாட்டை மக்கள் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

No comments