தாவடிக்கு போன பணிப்பாளர்?


யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் கொரோனா அடையாளம் காணப்பட்ட முதல் நபரான சிவானந்தன் தற்போது வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் மேலும் அவரது உடல்நிலை சாதாரண நிலையிலேயே காணப்படுகின்றது என்று யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், குறித்த நபரின் பிள்ளை, மனைவிக்கும் கொரோனாத் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பரிசோதனையின் பின்னர் அடுத்த நாள், சிவானந்தனின் குழந்தையைச் சென்று நேரில் சந்தித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments