யாழில் யாசகர் சாவு? பட்டினிச்சாவு அல்ல!
யாழ்.நகர் பகுதியில் யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். நகரையண்டிய கோட்டை முனியப்பர் ஆலயத்துக்கு
அருகில் அவரது சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் பட்டினியால் சாவு அடையவில்லையெனவும் நோய்,வயோதிபம் காரணமாகவே மரணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சனின் ஏற்பாட்டில் முனியப்பர் கோவிலடியில் உள்ள அனைவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் ஹோட்டல்கள் இரண்டினால் சுழற்சி முறையில் இலவச உணவு கடந்த 20 நாள்களாக வழங்கப்பட்டு வந்தது என்று பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment