கொரோனா பிடித்தவருடன் பழகினால் எச்சரிக்கும் செயலி!

கொரோனா வைரசான COVID-19 கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களைக் கண்டறியும் முயற்சியில் Apple, Google நிறுவனங்கள் இணைந்துள்ளன.
Bluetooth தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை செயல்படுத்த தட்டமிட்டுள்ளனர்..
ஒருவருக்குக் கிருமி தொற்றினால் அவர்கள் ஒரு செயலி வழியாகத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும்போது,அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைச் செயலி எச்சரிக்கும் என்று கூறுகின்றனர்.
பெயர், இடம் அல்லது எந்தவிதத் தனிப்பட்ட தகவல்களை இந்த செயலியில் பயனாளர்கள் வெளியிட வேண்டியதில்லை.
அடுத்த மாத மத்தியில் புதிய மென்பொருளை வெளியிட Apple, Google நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

No comments