யேர்மனியில் முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு €25 முதல் €10,000 வரையான அபராதம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக
நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தின் போது மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என யேர்மனியின் 16 மாநிலங்களில் 15 மாநிலங்கள் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளன. ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் மாநிலம் நாளை புதன்கிழமை இச்சட்டத்தை அமுல்படுத்தவுள்ளது.

முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு 25 யூரோக்கள் முதல் 10,000 யூரோக்கள் குற்றப் பணம் அறிவிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் அறவிடப்படும் குற்றப்பணம் வெவ்வேறு தொலையில் அமையும்.

யேர்மனி மற்றும் பிராங்போட் மாநிலங்கள் குற்றப் பணத்தை அறவிடமாட்டோம் என்று கூறியுள்ளன. ஆனால் அனைவரும் முகக் கவசங்கள் அணிவது ஏனையவர்களுக்கு மரியாதை வழங்குவதாக அமையும் எனக் கூறியுள்ளன.

ஏனைய மாநிலங்களில் சிலவற்றில் மக்கள் ஆரம்பத்தில் பழகுவதற்கு ஏற்றவகையில் குற்றப் பணம் அறவிடுவதில் கருணை காட்டப்படடும் எனக் கூறப்பட்டுள்ளது.

வணிக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசங்கள் அணிய வேண்டும். இல்லாவிட்டால் பெரியளவு குற்றப்பணம் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்கள் சுவாசக் கவசங்கள் அணியாத நபருக்கள் பிடிபடும் போது மீண்டும் மீண்டும் அவர்களுக்கு குற்றப்பணம் அறவிடப்படும் என அறிவித்துள்ளன.

சாக்சோனி மற்றும் மெக்லென்பர்க்-வோர்போமர்ன் போன்ற சில மாநிலங்கள் தங்கள் குடிமக்களுக்கு முகக்கவசங்களை வழங்குவதாகக் கூறியுள்ளன.

முகக்கவசங்கள் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முகக் கவசங்கள் இல்லாதவர்கள் மூக்கையும் வாயையும் மறைக்கக்கூடிய துண்டைக் கட்டினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments