கனடாவில் 12 மணிநேர தொடர் துப்பாக்கிச் சூடு! காவல்துறை உட்பட 16 பேர் பலி!

கனடாவின் நோவா மாகாணத்தில்  ஸ்கொட்டியாவில் ஆயுததாரி ஒருவர் 12 மணிநேரமாக நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 16 பேர் பலியாகியுள்ளதாக
உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

மாகாண தலைநகரான ஹாலிஃபாக்ஸுக்கு வடக்கே 130 கி.மீ (80 மைல்) தொலைவில் உள்ள கடலோர நகரமான போர்டாபிக் நகரில் நடந்த சம்பவத்தில் மற்றொரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை "ஒரு பயங்கரமான நிலைமை" என்று கூறியுள்ளார். "ஒரு பயங்கரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் செல்கிறது" என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார்.

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என கனேடியக் காவல்துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று சனிக்கிழமை நோவா ஸ்கோடியா பகுதியில் ஆயுததாரி ஒருவர் 12 மணிநேரம் பல இடங்களில் துப்பாகிச் சூட்டை நடத்தி மக்களைக் கொன்றுள்ளார். இதில் காவல்துறையினர் ஒருவர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு கூறிவிட்டு ஆயுததாரியை வீடு வீடாகச் இன்று ஞாயிறு வரை காவல்துறையினர் தேடினர்.

ஒரு கட்டத்தில் துப்பாக்கிதாரி காவல்துறையினரின் உடையணிந்து மாறுவேடத்தில் மகிழுந்து ஒன்றில் தோற்றமளித்துள்ளார்.

டவுன்டவுன் ஹாலிஃபாக்ஸின் வடமேற்கே நோவா ஸ்கொட்டியாவின் என்ஃபீல்டில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் ரோயல் கனடிய மவுண்டட் காவல்துறையினர் (ஆர்.சி.எம்.பி) அவரை கைது செய்தனர். பின்னர் அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

உயிரிழந்து துப்பாக்கிதாரி 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கறித்து ஆர்.சி.எம்.பி தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ் லெதர் கூறிகையில்:-

அனைத்து கொலைகளுக்கும் ஒருவரே பொறுப்பு. அவர் மாநிலம் முழுவதும் நகர்ந்து சென்று இக்கொலைகளைச் செய்துள்ளதாக நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

இன்று நோவா ஸ்கோடியாவுக்கு ஒரு பேரழிவு நாள், இது பல ஆண்டுகளாக மனதில் பதிந்திருக்கும் என்று நோவா ஸ்கொட்டியாவில் உள்ள ஆர்.சி.எம்.பி.யின் கட்டளை அதிகாரி லீ பெர்கர்மேன் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேசிய காவல்துறைக் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் பிரையன் சாவ், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரியும் ஒருவர், மற்றொருவர் காயமடைந்துள்ளார் என்றார். 

No comments