சுவாசக்கவசம் கட்டாயம்! 10 பேர் ஒன்றுகூடலாம்! உணவகம், மதுக்கடைக்கு அதிமதியில்லை! பிரான்ஸ் பிரதமர்

பிரான்சில் மே 11 ஆம் திகதி முடக்க நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்புப்போது பொதுப் போக்குவரத்து மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
சுவாசக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிக்கையில்:-

மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் முதல் பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படவுள்ளது. மாணவர்கள் முகக் கவசங்கள் அணிவார்கள்.

அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் சந்தைகளும் மீண்டும் திறக்கப்பபடவுள்ளது. ஆனால்  மதுக் கடைகள் மற்றும் உணவகங்களுக்கு அனுமதியில்லை.

கடையில் பணியாற்றுவோர் முகக் கவங்கள் அணிய உரிமையண்டு. கடைகளுக்குள் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றப்படல் வேண்டும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது அனுமதிப் பத்திரம் இன்றிப் பயணிக்க முடியும். ஆனால் பொது இடங்களில் குழந்தைகள் உட்பட 10 பேர் ஒன்று கூடலாம்.

நடைமுறையில் உள்ள முடக்க நிலையால் 62 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம்.

பொருளாதார சரிவை தவிர்ப்பதற்காக நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு இது சரியான நேரம் இல்லை.

பயனுள்ள ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரைக்கும் வைரசுடன் வாழ நாங்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments