சுவாசக் கவசம் அணியாது சென்றதால் விமர்சனத்துக்கு உள்ளாகினார் அமொிக்க துணை அதிபர்

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும் என்ற அமொிக்க மருத்துவ மையத்தின் சொந்த விதிமுறைகள் மீறிசுவாசக் கவசம்
அணியாமல் மருத்துவமனைக்கு பயணம் செய்துள்ளார் அமெரிக்க துணைத் அதிபர் மைக் பென்ஸ்.

மினசோட்டாவில் உள்ள மயோ கிளினிக்கில் முகமூடி இல்லாமல் இருந்த ஒரே நபர் திரு பென்ஸ் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவாசக் கவசம் தேவை என்பதை அமொிக்காவின் துணை அதிபருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திரு பென்ஸ் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவை வழிநடத்துகிறார்.

இந்நிலையில் கடும் விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments