ரணிலின் கடைசிகாலம்:துரத்தும் ஊழ்வினை?


உள்கட்சி முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்திலேயே அவர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார். இதனால், அவரே 10 பில்லியன் பெறுமதியான பிணைமுறிகளை விற்பனை செய்ய ஆலோசனையும் வழங்கியிருந்தார் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன, ஊடகமொன்றுக்கு இன்று (06) கூறியுள்ளார்.

அதேவேளை, வெளிநாடு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று நாடு திரும்பியுள்ளார் .

No comments