குழப்பவாதி ரணிலே: மனோ?


ஜக்கிய தேசிய முன்னணி கூட்டை குழப்புவதில் ரணிலே மும்முரமாக இருப்பதாக மனோ குற்றஞ்சுமத்தியுள்ளார். ரணிலோ, "கூட்டணியை கடாசி விட்டு வாருங்கள், மீண்டும், ஐ.தே.கட்சி என்றே போட்டி போடுவோம்", என்கிறார்.

கூட்டணி அமைத்து, அதற்கு சஜித்தை தலைவராக்க, ரஞ்சித்தை செயலாளராக்க, கூட்டாக போட்டியிட, கடந்த மாதமே ஐதேக செயற்குழு எடுத்து அறிவித்த முடிவுகளை நம்பி கட்சி, கூட்டணி உடைய கூடாது என்ற நல்லெண்ணத்தில் செயற்பட்டால், சின்ன(ம்) என்ற பிரச்சினையை கிளப்பி, இன்று இந்த முடிவை  அறிவித்துள்ளார்.

ஆக, ஐதேக செயற்குழுவின் தீர்மானங்களையே ரணில் இடை நிறுத்துகிறார். அதை செய்து, ரணில் தலைவர், அகிலவிராஜ் செயலாளர், ரவி கருணாநாயக்க பிரதி தலைவர், நவீன் திசாநாயக்க தேசிய அமைப்பாளர் என்ற அடிப்படைகளில் நாம் போட்டியிட வேண்டும் என்கிறார்.

இந்த திடீர், "மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் திட்டம்", ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சி படுத்துகிறது. யார் எவருடன் "டீலில்" இருக்கிறார்கள் என காட்டுகிறது.

இனி களத்தில்தான் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார். 

No comments