நீதி தூக்கில் தொங்கிய நாட்டில் கொலையாள் சிறையிருப்பதில்லை


நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை கைதியான இராணுவ சார்ஜன்ட் சுனிலுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும்,

தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் நம்பக்கூடாது. நாட்டின் உள்நாட்டுப் போரின்போது எட்டு பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாயை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போவது தான் ஒரே தீர்வு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியதன் விளைவு தான் இது.

கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம். கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்பத் தமிழ் மக்கள் இனியும் தயாரில்லை.

தமிழ் இனப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கேட்க ஐ.நாவிடம் சர்வசன வாக்கெடுப்பை கோர வேண்டும்.

சிறிலங்காவின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லை. அதற்குள் ஆட்சியாளர்களினதும், இராணுவத்தினரதும் தலையீடுகள் உண்டு. - என்றுள்ளனர்.

No comments