நோய் பரவலை தடுக்க முடக்கம்?


வடக்கை இலக்கு வைத்து கொரோனோ வைரஸ் தாக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையைக் கருத்திற்கொண்டு இன்று பிற்பகல் மூன்று மணியுடன் அவை பூட்டப்பட்டுள்ளன.

வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருட்களை கொள்வனவு செய்தல் சிறந்தது. குடும்பத்துடனோ கூட்டமாக வருவதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நீண்ட நேரம் வங்கிகளை திறந்து வைத்திருப்பதனால் ஊழியர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் இலங்கை மத்திய வங்கி,  வங்கி நிர்வாகங்கள் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் சங்கம் என்பவற்றிற்கு வங்கி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியாளர்கள் சங்கத்திற்குட்பட்ட அனைத்து வங்கிகளும் 4 மணித்தியாலங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுவதுடன் வார இறுநாள் சேவைகளும் நடைபெறமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பொது போக்குவரத்து உள்ளிட்டவை முடங்கியுள்ளன.

மக்களது நடமாட்டங்கள் முடக்கப்படாவிட்டால் கொரோனோ வைரஸ் பரவுகையினை கட்டுப்படுத்த முடியாதென மருத்துவர்கள் கூட்டாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments