பாடாலைகளை மூடி மாணவர்களிற்கு விளையாட்டு போட்டி?


பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இழுத்து மூட உத்தரவிட்ட ஆளுநர் மறுபுறம் ஆயிரக்கணக்கானில் மாணவர்கள் ஒன்று திரளும் விளையாட்டு நிகழ்வுகளை யாழ்.நகரில் நடத்த அனுமதித்துள்ளமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.

அவ்வவ் பிரதேச செயலகங்கள் ஊடாக விளையாட்டு திணைக்களம் இணைந்து விளையாட்டு கழகங்களை இணைத்து இத்தகைய போட்டியினை நடத்துகின்றன.

இந்நிகழ்வில் பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் விளையாட்டு கழகங்கள் எனும் பெயரில் பங்கெடுக்கவுள்ள நிலையில் அதனை யார் அனுமதித்தார்கள் என கேள்வி எழுப்பபட்டுள்ளது.

இதனிடையே குறித்த விளையாட்டு நிகழ்வு தொடர்பாக இன்றிரவு அரச அதிபர்.ஆளுநர் அலுவலகமென அனைத்து தரப்புக்களும் மௌனம் காத்துவருகின்றன.

No comments