கசூரினாவுக்கும் தடை: கர்தினாலும் தடை?


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளது வருகையினை தவிர்க்க காரைநகர் கசூர்னா சுற்றலாக் கடற்கரையினை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளி நாட்டவர் வந்து செல்வதால் தற்காலிகமாக மூடுவது சிறந்தது பிரதேச சபை விசேட கூட்டத்தில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சிபார்சு செய்துள்ளது. அத்துடன் உள்ளூர் பொது மக்களையும் செல்வதனை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இம்மாத இறுதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு வழிபாடுகளில் , ஏனைய தினங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments