கடற்படைக்கு சூலக்குத்து: தமிழ்மகனிற்கு காவல்துறை அடி?


யாழ்ப்பாணம் இளவாலைப்பகுதியில் சிவில் உடையில் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படை சிப்பாய்க்;கு ஆலய சூலத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து காயத்துடன் கடற்படை சிப்பாயும்; அடிகாயங்களுடன் கிராம இளைஞரும் ஒரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளவாலைப்பகுதியில் கைகலப்பு ஒன்றில் கிராம இளைஞர் அப்பகுதியில் இருந்த ஓர் சூலத்தினால் கடற்படையினர் மீது குத்தியதில் குறித்த கடற்படை சிப்பாய்; காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த கடற்படை சிப்பாய் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த தகவல் இளவாலைப் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த இளைஞனை கைது செய்த பொலிசார் குறித்த இளைஞன் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.அடி காயங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட  இளைஞனும் நேற்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

No comments