அங்கஜன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுபத்திரத்தில் இன்று (18) முதன்மை வேட்பாளர் முன்னாள் எம்பி அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.

கைலாசபிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் அலுவலகத்தில் அங்கஜன் தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனு கையளிக்கப்பட்டது.

வேட்பாளர் விபரம் :

- அங்கஜன் இராமநாதன்,
- ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின்,
- சங்கரப்பிள்ளை பத்மராஜா,
- கந்தையா தியாகலிங்கம்,
- சிவலிங்கம் கேதீஸ்வரன்,
- அருளானந்தம் அருண்,
- பாலகிருஸ்ணன் முகுந்தன்,
- பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம்,
- பவதாரணி ராஜசிங்கம்,
- ஜோசெப் பிரான்சிஸ்

No comments