வெளிநாட்டு பெண்களிடம் பாலியல் சேட்டை- ஒருவர் சிக்கினார்

அம்பாறை - பொத்துவில் பகுதி ஹோட்டல் ஒன்றில் 18 - 19 வயதுடைய பிரித்தானிய பெண்கள் இருவரை பாலியல் ரீதியில் தாக்கிய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த குறித்த பெண்கள் இருவரும் பிறிதொரு ஹோட்டலுக்கு மாறிய பின்னர் தமது உடமைகளை மீள எடுக்க சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments