தெறிக்கிறது தமிழரசு?


சயந்தனையோ,ஆனோல்ட்டையோ தனக்கெதிராக பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கவில்லையென  சுமந்திரன் மறுதலித்துள்ளார்.

இன்றைய கொழும்பு வார இதழ் ஒன்றின் முன் பக்கத்திலே “சுமந்திரனின் முன்மொழிவை நிராகரித்தார் மாவை” என்ற தலைப்பிலே வெளியான செய்தி சம்பந்தமாக விளக்கமளித்துள்ள சுமந்திரன் செய்தியில் உள்ள பல பொய்களில் ஒன்றை மட்டும் இப்போது சுட்டிக்காட்டுகிறேன். யாழ் மாவட்ட வேட்பாளர்களாக ஆர்னோல்ட் மற்றும் சயந்தன் ஆகியோரை நான் இக் கூட்டத்தில் முன்மொழிந்ததான செய்தி முற்றிலும் பொய்யானது. இக் கூட்டத்தில் எத்தருணத்திலேயும் சயந்தனின் பெயர் எவராலும் உச்சரிக்கப்படவே இல்லை.

சயந்தன் வேட்பாளராக விண்ணப்பிக்கவே இல்லை. கட்சி எத்தருணத்திலேயும் விண்ணப்பங்களை கோரியிருக்கவும் இல்லை. விண்ணப்பித்த மற்றவர்கள் யார் என்று கேட்கப்பட்ட போது தான் திரு. சேனாதிராஜா அவர்கள் ஆர்னோல்ட் இன் பெயரைக் குறிப்பிட்டார். நானோ வேறு எவருமோ அது சம்பந்தமாக எதுவும் கூறவில்லை. இச் செய்தியில் வேறு பல பொய்களும் இருந்தாலும் மேற் சொன்ன கட்சியின் விசுவாசமான தொண்டர்கள் இருவர் மீதும் வேண்டுமென்றே களங்கமேற்படுத்தும் செயல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதனால் இதை மட்டும் இப்போது பதிவு செய்கிறேன்.
இக் கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் கட்சியின் நியமனக்குழ உறுப்பினர்கள் மட்டுமே. இப்படியாக பொய்ச் செய்தி கொடுப்பவர்கள் கட்சியின் பொறுப்புள்ள பதவிகளில் இன்னமும் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது என தெரிவித்தார்.

No comments