ஏழை வரதரின் மகள் விமானி:போயிங் செலுத்தினார்?


வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக ஊடக சந்திப்புக்களில் கண்ணீர் சிந்தும் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராசப்பெருமாளின் மகள் போயிங் 737 ரக விமானத்தை செலுத்தும் விமானியாகியிருக்கிறார்.

இந்திய அரசினால் வழங்கப்பட்ட 64 கோடி பெறுமதியான வீட்டினை விற்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ள அவர் தனது அடுத்த கட்ட அரசியலில் மும்முரமாகியிருக்கின்றார்.

ஆனாலும் தன்னிடம் பணமேதுமற்ற ஏழை எனவும் கடைகளில் அன்பளிப்பு வாங்கினாலும் அதனை ஊடகங்கள் கப்பமென செய்தி பிரசுரிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனினும் பல கோடி செலவினில் மகளை பைலட் ஆக்கிய அவர் அண்மையில் தான் காணாமல் போனோர் தொடர்பில் போராடுவது வீணானது என தெரிவித்திருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments