முல்லையில் கண்ணீரும் கதறலுமாக போராட்டம்

1097-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து, சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முல்லைத்தீவு நகரிலிருந்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் 2017-03-08 ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மூன்று வருடங்களை கடந்து, நான்காவது வருடம் ஆரம்பிக்கின்ற இன்றைய நாளில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போராட்டத்திற்கு முல்லை நகர வர்த்தகர்கள் ஆதரவு வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டத் தக்கது.

No comments