அனைவருக்கும் வரம் கொடுத்த சமூர்த்தி உத்தியோகத்தர்?


சர்ச்சைக்குரிய சுவிஸ் போதகருடன் தொடர்புடைய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கும்
உட்பட்டுள்ளார். சுண்டிலிப்பாயை சேர்;ந்த அவருடன் தொடர்புபட்டு சமூர்த்தி உதவிகளை பெற்ற 214 பொதுமக்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

சுவிஸ் போதகருடன் சம்மந்தப்பட்ட அல்லது ஆராதனையில் கலந்து கொண்டிருந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமூர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்  அரியாலைப் பகுதிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த மத போதகர் ஒருவரினால் தவடிப்பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளன குடும்பஸ்தர் வசிக்கும் தாவடி கிராமம் பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த ஆராதனையில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கலந்து கொண்டிருக்கிறார். சண்லிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அவர் ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர்.

அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர் கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments