ரவியை காணவில்லை - வலை போட்டு தேடும் சிஐடி

மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய சிஐடியினர் நேற்று (07) அவரது வீட்டில் தேடுதல் நடத்திய போது அவர் காணாமல் போயுள்ளார்.

நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்திய போதிலும் அங்கு ரவி கருணா இருக்கவில்லை என்று மூத்த சிஐடி அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரவி கருணாவை தேடி 25 சிஐடி குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது.

No comments