கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரணம் இல்லையா?

கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை தேடி வருபவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரண வசதிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர் நாட்சம்பளத்துக்கு தொழில் செய்துவரும் பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

அவர்கள் அன்றாடம் உணவுக்கும் கஷ்டப்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எந்த வேலைத்திட்டமும் இல்லாமல் இருக்கின்றது.

அரசாங்கம் பிரதேச சபை மற்றும் கிராம சேவகர் ஊடாக நிவாரண பொதிகளை பணத்துக்கு வழங்கிவருகின்றது. அரசாங்கத்தின் இந்த நிவாரண பொதிகளை பணம் உள்ளவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

கூலித்தொழில் செய்து வருபவர்கள் இதனை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்றார்.

No comments