துப்பாக்கி சூடு:3 கைதிகள் மரணம்:தமிழ் கைதிகள் பற்றி தகவலில்லை!


அனுராதபுரம் சிறையில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே அனுராதபுரம் சிறையினை முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ள கைதிகள் தப்பித்து செல்ல மதிலை உடைத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையினுள் கொரோனா தொற்றியிருப்பதாக பரவிய வதந்தியை அடுத்து கைதிகள் சிறைகளிலிருந்து வெளியே வந்து தம்மை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து அதிரடிப்படை மற்றும் இராணுவம் தருவிக்கப்பட்டு கைதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.

அதன் போதே கைதிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது நிலை பற்றி தகவலில்லை.   

No comments