இது தான் பாஸ்டரின் பயண நிரல்?


சுவிஸிலிருந்து இலஙகை வந்து கொரோனோ பரப்பிய பாஸ்டரின் பயண பட்டியல் வெளியாகியுள்ளது.

சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இதனை ஆய்வு செய்துவருவதுடன் மேலதிக தகவல்களை பெற பலரையும் தொடர்புகொண்டு வருகின்றனர்.

போதகரின் பயண விபரங்கள்:
1. 10.03.2020 காலை 9 மணி கட்டுநாயக்கா விமான நிலையம்.
2. காலை 10 மணி யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு அமர்த்திய வான்

3. அனுராதபுரத்தில் மங்கோ மங்கோ ஹொட்டலில் பழச்சாறு
4. அரியாலை தேவாலயம் வருகை. தேவாலயத்தில் தங்கி இருந்தமை. தேவாலயம் அருகில் உள்ள உறவினர்களால் உணவு வழங்கப்ட்டது.
5. 13.03.2020 யாழ். ஹட்டன் நசனல் வங்கி, கே.கே.எஸ் வீதி சமிக்ஞை விளக்கு சந்தியில் உள்ள சந்தை.
6. கட்டுநாயக்கா யாழ்ப்பாணம் வரும் வழியில் சாரதியினால் முருகண்டியில் வாகனம் நிறுத்தப்பட்டது.

குறித்த போதகருடன் மிக நெருக்கமாக இருந்து உணவு அருந்திய 82 வயது முதியவர் ஒருவர் பருத்தித்துறைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவுமற்ற நிலையில் இவர் தனிமைப்பந்தப்பட்டுள்ளார்.

No comments