தேர்தல் கால பந்தடிப்பு: வடக்கு ஆளுநருக்கு எதிராக புகார்?


தேர்தல் அறிவிப்பின் பின்னராக வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டு வரும் இடமாற்றங்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர்களை மாற்றிய ஆளுநர் தற்போது சுகாதார அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட செயலாளர் ஒருவரை திடீரென பதவியிறக்கியுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் அறிவிப்பின் பின்னராக இத்தகைய இடமாற்றங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கு மாகாண சபைக்கு புதிதாக நிர்வாக சேவை தரம் 3ற்கு தேர்வான எட்டு பெண்கள் நேற்றைய தினம் நியமனம் செய்யப்பட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இவ்வாறு வடக்கு மாகாண சபைக்கு நிர்வாக சேவையில் இணைந்தவர்கள் இல் சுகாதார அமைச்சரின் உதவி செயலாளர் , வடக்கு மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளர் , உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் ,
கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர். மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உதவி ஆணையாளர் மற்றும் உதவிப் பிரதம செயலாளர் ஆகிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments