நீர்கொழும்பு கொலை; ஒருவர் கைது

நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் நேற்று (09) இரவு அன்சார் ஹோட்டல் ஊழியரான அ.க.அ. அஸீஸ் (33-வயது) என்ற இரு பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் தொடர்பில் இன்று (10) சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிசிடிவி (CCTV) காணொளியில் காணப்பட்ட சிலரை விசாரணைக்கு அழைத்து சென்ற பொலிஸார் விசாரணைகளின் பின்னர் தாஜுப் அப்ஜான் (36) என்பவரை சந்தேகத்தில் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தான் போது ஹோட்டல் உரிமையாளர்களான ரிஸ்வான் மற்றும் ஜிப்ரி ஆகிய சகோதரர்கள் இருவரும் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
https://www.facebook.com/612413352224064/posts/1875333042598749/

No comments