10 பேருடன் நாகதம்பிரானுக்கு பொங்கல்


கிளிநொச்சி - புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம், இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் மட்டுமே இடம்பெறுமென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 6ம் திகதியன்று இந்த வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறுமெனவும் பங்குகொள்கின்ற அனுமதிக்கப்பட்ட 10 பேரும் பொது சுகாதாரப் பரிசோதகர், பிரதேச மருத்துவ அதிகாரி ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் பொலிஸாரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments