யாழ்.வந்த நோயாளி: தொடங்கியது ஆய்வு!


கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருந்தார்? அவர் யார் யாரை சந்தித்தார் போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது.

கடந்த 11ம் திகதி யாழில் திருமண நிகழ்விற்காக வருகை தந்திருந்த அவர் சந்தித்த மற்றும் அவர் பங்கெடுத்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 120 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரம் குறித்த ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


No comments