உதவிபுரிந்த முத்துமாரி அம்மன் ஆலயம்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் தொழிலுக்குச் செல்ல முடியாது கஷ்டப்படும் மக்களுக்காக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அவர்களின் விடுகளுக்குச் சென்று வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபையினரால் வழங்கப்பட்டது.

இன்படி மறவன்குளம், ஈஸ்வரிபுரம், தரணிக்குளம், பூம்புகார், கல்மடு, சாளம்பன், முல்லைக்குளம், கோதண்டர், நொச்சிக்குளம், சுந்தரபுரம், புதுக்குளம், அம்மிவைத்தான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தமது அன்றாட உணவுத் தேவையை நிர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

இவர்களுக்காக வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபையினரால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.

அத்துடன் இப்பணிக்கு உதவி வழங்க விரும்புவோரும் (0766975042, 0776891688) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments