மகனை தேடிய அடுத்த தாயும் மரணம்

2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு பிள்ளையான பாலசுப்ரமணியம் அருட்செல்வனை (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 21) கடந்த பத்து வருடங்களாக தேடிக் கொண்டிருந்த தாயாரான பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி (72-வயது) நேற்று (04) அதிகாலை சுகவீனம் காரணமாக இயற்கை எய்திக் கொண்டார். 

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், காணாமல் ஆக்கப்பட்டாேரை தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்று (1111) நாட்களை எட்டியுள்ள நிலையில், அப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் தெரிவித்திருந்தார்.

தாயாரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் இன்று (05) இடம்பெற்றது.

No comments