தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக்கூட்டு கண்காணிப்பில்?


யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஊரடங்கு விலக்கப்படுவதை முன்னிட்டு அவர்களது நடமாட்டம் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டது.இதனையடுத்தே இன்றிரவு முதல் அவர்கள் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி செம்மணி, இளையதம்பி வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சுவிட்சர்லாந்தில் இருந்துவந்த மதபோதகர் ஆராதனை நிகழ்த்தியிருந்தார். இவர் மீண்டும் சுவிட்ஸர்லாந்துக்கு திரும்பிச்சென்றுள்ள நிலையில் அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவருடன் தொடர்பினைப் பேணியவர்கள் மற்றும் தேவாலய ஆராதனையில் கலந்துகொண்டவர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைய சூழல் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டவர்களை வீட்டிலேயே 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எனினும் நாளை அவர்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளை நடமாடலாமென தெரிவிக்கப்பட்டதனையடுத்தே உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்காணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments