வடகிழக்கில் மீண்டும் கிராமிய சந்தைகள்!


விடுதலைப்போராட்ட காலத்தில் முனைப்பு பெற்றிருந்த கிராமிய உழவர் சந்தைகள் மீண்டும் வடக்கில் முளைக்கின்றன.அதனால் விவசாயி தனது
உற்பத்திகளிற்கு தானே விலையை தீர்மானிக்கும் சூழல் இதனால் வலுப்பெற்றுள்ளது.

பொதுச்சந்தைகளை நோக்கி மக்கள் படை எடுப்பதனால் கொரோனா தொற்றை தடுக்க முடியாதுள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரில் நடமாடும் விநியோக சேவைகள் முனைப்பு பெற்றுள்ள போதும் அது வடகிழக்கில் வெற்றி பெற்றிருக்கவில்லை.

இந்நிலையிலேயே போராட்ட காலத்தில் முனைப்பு பெற்றிருந்த கிராமிய சந்தைகள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது.

No comments