சுமாவுடன் அம்பிகையே நேரில் வந்தாள்?

தென்மராட்சி வனப்புறு வனிதையர் நடத்தும் மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றது.

பவுலின் சுபோதினி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கல்வியில் பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் சட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை அரசியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு போன்ற தலைப்பில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.No comments